அன்று காலை எட்டு
மணி.. மொபைல் அலாராம் அலறியது.. தூக்கத்தில் அதை
நிறுத்திவிட்டு மறுபடியும் தூங்கினான் பிரபு.. கதவை யாரோ தட்டும் சத்தம்..
எவண்டா நிம்மதியா தூங்க கூட விடமாடிங்குரங்க.. மீண்டும் பலமாக கதவு தட்டும் சத்தம்
கேட்டு எழுந்து வந்து கதவை திறந்து பாத்தால் குமார்.
குமார்: மச்சி மணி
எட்டு ஆச்சு இன்னும் கெளம்புலியா, டேய் இன்னிக்கு உனக்கு முதல் நாள் ஆபீஸ்.
கஷ்டப்பட்டு ரெகமண்டேசன் புடுச்சி, மேனேஜர்கிட்ட கெஞ்சி இந்த வேலைய உனக்கு வாங்கி
தந்திருக்கிரேன் அத கெடுத்துறாத. இன்னும் கால் மணி நேரத்துல நாம கெளம்பறோம்..
முக்கால்மணி
நேரத்தில் பிரபு ரெடியானான்.. இருவரும் பைக்கில் கிலம்பினார்கள்.
புதிய ஆபிஸில்
முதல் நாள், குமார் இரண்டாம் தளத்திலும் பிரபுவிர்ற்கு ஆறாம் தளத்தில் ஆபீஸ்.. லிப்ட்டில்
இருவரும் நுழைந்தனர்
குமார்: நாவேனுனா
உங்க ஆபீஸ் வரைக்கும் வரட்டுமா.
பிரபு: நான் என்ன
சின்ன பாப்பாவா, நீ உன் ஆபீஸ்க்கு போ.
இரண்டாம் தளம்
வந்ததும் குமார் லிப்டிளிருந்து வெளியேறினான். பிரபு மட்டும் லிப்டில் தனியாக
சென்றான்.. என்ன செய்வதென்றே தெரியவில்லை. லிப்டு கதவு திறந்தது கண் பிதுங்கி நின்றான்.. சுத்தியும்
ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா என மாநிலம் வாரியாக லட்டு மாதிரியான பெண்கள் கூட்டம். எந்த பொண்ணைப் பார்க்க, என்ற எக்கச்சக்க குழப்பத்தில் இருந்தவனின் செல்போன் சிணுங்கியது.
குமார் எதுக்கு அதுக்குள்ள குபுடுறான்.
குமார்: மச்சி,
புது ஆபீஸ் எப்படி இருக்கு...
பிரபு: "மச்சி, என்ன ஆபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செயற்கையாக வெட்கப்பட்டான்.
குமார்: "உனக்கு மச்சம் தான்டா. 'பிரபு'ங்கிற உன் பேரைவிட 'கண்ணன்'னு பேர் வச்சிருந்தா அந்த இடத்துக்கு நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்சும் பாட்டீஸ்சுமா"
பிரபு: "மச்சி, என்ன ஆபிஸ்டா இது? ஒரே பொண்ணுங்க கூட்டம். அம்பி மாதிரி இருக்கிற என்னை ரெமோ மாதிரி ஆக்குறாளுங்கடா..?" செயற்கையாக வெட்கப்பட்டான்.
குமார்: "உனக்கு மச்சம் தான்டா. 'பிரபு'ங்கிற உன் பேரைவிட 'கண்ணன்'னு பேர் வச்சிருந்தா அந்த இடத்துக்கு நல்லா இருந்திருக்கும். என் ப்ராஜ்க்ட்லயும் இருக்காங்களே. ஹூம்ம் ஒரே ஆன்ட்டிஸ்சும் பாட்டீஸ்சுமா"
பிரபு: "சரி புலம்பாத. அதுக்கெல்லாம் லக் வேணும். சரி லஞ்ச்க்கு
போன் பண்றேன். இப்ப என்ன டிஸ்டர்ப் பண்ணாத.. பை"
டீம் மேனேஜர்: ஹலோ பிரபு, வீ ஹப்பிளி வெல்கம் யூ டு அவர் டீம்..
டீம் மேனேஜர்: ஹலோ பிரபு, வீ ஹப்பிளி வெல்கம் யூ டு அவர் டீம்..
தன் டீமிடம்
அறிமுகப் படுத்தினார்.. பிறகு ஒரு மாதிரியாக தன் சீட்டில் செட்டில் ஆனான். அவன் ப்ராஜெக்ட்
ரிப்போர்டுகள் பார்த்துக் கொண்டு தனது கணினியை ஆன் செய்தான். மை லாக்கர் என்ற போல்டரை ஓபன் செய்தான். திரையி பெண்கள்
புகைப்பட களஞ்சியமே இருந்தது அதில் ஒரு சிறு வயசு புகைபடத்தை பார்த்ததும் அந்த
முகத்தை எங்கயோ பார்த்த ஞாபகம்.
அப்படியே கொசு
சுருள் சுத்த ஆரம்பிக்கிறது. “பப்பு.. பப்பு உன்னை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன்”
இன்டர்காம் சிணுங்கள்
சத்தம் கேட்டு தன் கணவு கலைத்தது.
குமார்: மச்சி, ஐயம்
வெய்டிங் டவுன்.. சீக்கிரம் வாட பசிக்குது.
பிரபு: ம்ம்..
வர்றேன் வை.
பக்கத்தில் ஒரு
ஹோட்டலுக்கு சென்றனர். பிரபு முகம் வாடியிருந்தது.
குமார்: ஏன் டா டல்லா
இருக்குற, காலைல அம்பியா இருந்து ரெமோ மோடுக்கு போன.. நானு மணிநேரம் கூட ஆகுல
அதுக்குள்ள என்னாச்சு. யாரு உன்ன அன்னியான மாத்துனது.
பிரபு: ஒன்னும்
இல்ல.
குமார்: எதோ ஒன்னு
இருக்கு. இப்பவே சொல்லு.. அப்புறம் நைட்டு சரக்கடிக்கீல என்கிட்ட வந்து பொலம்ப
கூடாது.
பிரபு: இல்ல மச்சி.
ஆபீசி சிஸ்டத்துல கொஞ்ச போட்டோ இருந்துச்சு அதுல பப்புவ பாத்தேன்.
குமார்: என்னடா
சொல்லுற.... ஹேமா, நந்தினி, ஹரிணி, வர்சினி ஓகே. லிஸ்ட்டில இல்லாத பெரா இருக்கு.
மொதல்ல இந்த பப்பு யாருனு சொல்லு..
பிரபு: பப்பு என்
சின்ன வையசு தோழி. ஸ்கூல் முலாண்டு லீவுக்கு என் சொந்தக்கரங்க வீட்டுக்கு பத்து
நாள் இருப்பேன் அவுங்க பக்கத்து வீட்டு பொண்ணுதான் பப்பு. மூணு வருசத்துல முப்பது
நாள் தான் என்கூட ஒன்ன விளையாடியிருப்பா. என்னக்கு பப்புவ ரொம்ப பிடிக்கும். என்
ஒன் சைடு லவ்வர்னு வச்சுக்கோவெ.
குமார்: ம்ம்..
பிஞ்சுலையே பளுத்தவனா டா நீ. சரிவிடு அவ இப்ப உங்க டீம்லயா இருக்குரா.
பிரபு: தெரில டா,
அவ சின்ன வையசு போட்டோ தான் பார்த்தேன்.
குமார்: விடுமச்சி
கண்டுபிடுச்சுரலாம். உங்க ஆபீசில தான் இருப்ப போய் விசாரிச்சு பாரு..
மதியம் ஆபீஸ்
போனதும் அந்த போட்டோவை தன் கைபேசியில் பதிவிறக்கம் செய்தான். தன் டீமில் அனைவரிடமும்
விசாரித்த்தில், இதற்கு முன்னாள் அந்த சிஸ்டத்தில் ராஜேஷ் தான் இருந்தார். சில
மாதத்திற்கு முன்தான் இங்கிருந்து சென்றார் ஆனால் அவரை பற்றியும் எந்த தகவல்களும்
இல்லை.
அன்றுமாலை
குமாருடன் சென்று சர்வீஸ்க்கு விட்டிருந்த தனது பைக்கை எடுத்துவிட்டு ரூமுக்கு
சென்றான். பப்புவின் ஞாபகம் மீண்டும் வர. எப்படி பப்பு போட்டோ அங்க வந்துச்சு. இந்த
ராஜேஷ் யாரு, ராஜேஷ்க்கும் பப்புவுக்கும் என்ன சம்பந்தம், எப்படி கண்டுபிடிக்கிறது என்ற ஒரே குழப்பத்தில்
இருந்தவன் தன் கைபேசியை எடுத்து குமாரை அழைத்தான்.
குமார்: சைடிஷ் வாங்கீடேன்..
ஆன்தவே மச்சி..
பிரபு: பப்புவ
எப்படிடா கண்டுபிடிக்கிரது..
குமார்: என்னது
மறுபடியும் பப்புவா..
பிரபு: சாக்குபோக்கு சொல்லி எஸ் ஆகா பாக்காத. நேர ரூமுக்கு வா.
குமார் மைன்ட் வாஸ் ”இன்னைக்கு இவனும் சரக்கடிக்க மாட்டன் நம்மளையும் அடிக்க விடமாட்டான் அப்படியே அடுச்சாலும் இவன் புலம்பல் தாங்க முடியாதே”
"எக்ஸ்கியூஸ் மீ" என்று ஒரு கீச்சிசு குரல் தன் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப்பார்த்தால்.
ஜீன்ஸ், டாப்பில் ஒரு பெண். துப்பட்டா மாதிரி இருக்கும் தோளில் துண்டு போடுவது
மாதிரி ஷாலை போட்டு இருந்தாள். தெளிவான திருத்தமான முகம். டாப்ஸில் ஏதோ
எழுதியிருந்தது.
பிரபு: "யெஸ்" என்றான்.
பிரியா :"ஐயாம் பிரியா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.
பிரபு: "ஷ்யூர்" போலாமே..
பிரபு: "யெஸ்" என்றான்.
பிரியா :"ஐயாம் பிரியா, இந்த ப்ராஜெக்ட்ல தான் நானும் வொர்க் பண்றேன். வெளில லஞ்ச் போகலாமா?" மென்மையாக கேட்டாள்.
பிரபு: "ஷ்யூர்" போலாமே..
அவள் பின்னாலேயே சென்றான்.
"யார் இவள், நான் ஏன் இவள் பின்னால் போகிறேன்" என்ற உண்மை லேட்டாக மனதில் உறைத்தது.
பார்க்கிங்கில் பிரபு, அவன் வண்டி அருகே சென்றான். அப்போது, "என் வண்டியில போயிடலாமே?" என்றாள்.
பிரபு: "ஓ.. ஷ்யூர்"
அப்போதும் ஏன் அப்படி சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.
பிங்கு ஸ்கூட்டி பின்னால் அமர்ந்தவன், அவள் விரித்து போட்டிருந்த கூந்தல் வண்டி வேகத்தில் முகத்தில் மோத, "என்ன ஷாம்பூவாக இருக்கும்?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினான். ஹோட்டலுக்கு அதுக்குள் வந்துவிட்டது.
உள்ளே சென்று எதிரெதிர் டேபிளில் இருவரும் அமர்ந்தனர். சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன் ஆர்டர் பண்ணிவிட்டு எனக்கு தேவையானதை ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு, கைகழுவ போயிருந்தாள்.
பிரபு மனதிற்குள் ஐன்ஸ்டீன் பிஸிக்ஸ் க்ளாஸ் எடுப்பதுபோல் ஒன்றும்புரியாமல் உட்கார்ந்திருந்தான். போன் சிணுங்கியது. பார்த்தால் குமார்.
குமார்: என்னடா ரொம்ப பிசியோ லஞ்சுக்கு குபுடுவேணு பாத்தேன்.
பிரபு : டேய் மச்சி, நான் சொன்ன நீ நம்ப மாட்டே. என் டீம்ல இருக்குற செமையான ஒரு பொண்ணுகூட லஞ்சுக்கு வெளில வந்திருகிரேன். இன்னக்கு சாய்ந்திரம் உன்னக்கு செம டிரீட் இருக்கு. சரி அவ வர்றா நான் போன வைக்கிறேன்
பிரியா : "எனக்கு ஆண்கள் சுத்தமாகப் பிடிக்காது. சுயநலவாதிகள். பெண்களிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டும் வீரர்கள்" என்று ஆரம்பித்தாள்.
பிரபு:"ஙே!"
பிரியா : "எல்லா விஷயத்திலும் பெண்கள் தங்களுக்கு கட்டுப்பட்டு போகவேண்டும் என்று யோசிக்கும் மனோபாவம் கொண்டவர்கள் ஆண்கள்" என்றாள் கடுப்பாக.
பிரபு மனதிற்குள், "இவளுக்கு என்ன பிரச்சினை? சம்பந்தமே இல்லாமல் என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கா?" என்று எண்ணினான்.
பிரியா: "என்ன? எதுவும் பேசாம இருக்கீங்க?"
பிரபு: "இல்லங்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எனக்கு ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னா அலர்ஜி"
பிரியா: "இதுகூட ஆண்களின் வறட்டு அதிகாரம் தான். பெண்கள் ஆண்களுக்கு சமமாக ஜீன்ஸ் போடுறாங்களேன்கிற கோபத்தின் வெளிப்பாடு தான்."
பிரபு மனதில் "ஓகே, இது எங்கயோ முத்திப் போன கேஸ். ரொம்ப அடிபட்டு இருக்கா" என்று நினைத்துக் கொண்டிருந்த போது, அவனுடைய போன் அடித்தது.
வீட்டிலிருந்து
அம்மாவின் அழைப்பு.
"ஒருநிமிஷம்" என்று கடுப்புடன் எழுந்து நகர்ந்தான்
"ஒருநிமிஷம்" என்று கடுப்புடன் எழுந்து நகர்ந்தான்
பிரபு : "என்னம்மா இந்த நேரத்துல?"
பிரபு அம்மா: "இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
பிரபு: "ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
பிரபு அம்மா: "எல்லாம் நல்ல விஷயம் தான்"
பிரபு : "சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் பிரியாவின் மீது இருந்த கடுப்பில்.
உள்ளே பிரியா லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என யோசித்துக் கொண்டு,
பிரபு அம்மா: "இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
பிரபு: "ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
பிரபு அம்மா: "எல்லாம் நல்ல விஷயம் தான்"
பிரபு : "சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றான் பிரியாவின் மீது இருந்த கடுப்பில்.
உள்ளே பிரியா லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என யோசித்துக் கொண்டு,
பிரபு: "இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன ரோல்?" என மென்மையாக கேட்டான்.
பிரியா : "இதுவும் ஒரு வகையான அணுகுமுறைதான். உங்க நிலையை விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடுதான் " என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
பிரபு கடுப்பின் உச்சிக்கே போனான்.
பிரியா : "இதுவும் ஒரு வகையான அணுகுமுறைதான். உங்க நிலையை விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடுதான் " என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
பிரபு கடுப்பின் உச்சிக்கே போனான்.
பிரபு : கொஞ்சம்
சத்தமாகவே "பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை" என்று சொல்லீடான்.
பிரியா : "என்ன? இப்ப நீங்க என்ன சொன்னீங்க?"
பிரபு : "இதெல்லாம் எதுக்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன தான் உங்க பிரச்சனை?".
பிரியா : "'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு சுய அனுதாபம் அதிகம்" என்று சொல்லிக் கொண்டே தன் கை பையில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
"என்ன ?" என பிரபு அதிர்ச்சியின் உச்சியில் கத்துவறகும் சரியாக இருந்தது.
பிரியா கையில் பிரபுவோட லேண்ட்ஸ்கேப் கலர் போட்டோ.
பிரபு : "ஹலோ, இது எப்படி உங்க கையில..?
பிரியா : "என்ன? இப்ப நீங்க என்ன சொன்னீங்க?"
பிரபு : "இதெல்லாம் எதுக்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன தான் உங்க பிரச்சனை?".
பிரியா : "'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு சுய அனுதாபம் அதிகம்" என்று சொல்லிக் கொண்டே தன் கை பையில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
"என்ன ?" என பிரபு அதிர்ச்சியின் உச்சியில் கத்துவறகும் சரியாக இருந்தது.
பிரியா கையில் பிரபுவோட லேண்ட்ஸ்கேப் கலர் போட்டோ.
பிரபு : "ஹலோ, இது எப்படி உங்க கையில..?
அதிர்ச்சியில் உறைந்தான்.
பிரியா : "இந்த ஞாயிற்றுக்கிழமை, நீங்க பொண்ணு பார்க்க போகும் சங்கர் வாத்தியார் வீட்டுப் பொண்ணு நான் தான்" என்றாள் முதல் முறையாக வெட்கப்பட்டுக் கொண்டே.
பிரியாவின் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!"
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.